நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி ஜூலை 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் ’கார்கி’. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தாமஸ் ஜார்ஜ், இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் 2D எண்டர்டைன்மண்ட் வெளியிட்டுள்ளது.