கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இன்று(மே 9) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சாய் பல்லவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து உள்ளார்.
சாய் பல்லவிக்கு பிறந்தநாள் பரிசளித்த கமல்..! - சிவகார்த்திகேயன்
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவிக்கு பிறந்தநாள் பரிசளித்த கமல்..!
அது என்னவென்றால், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள 'SK21' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
இதையும் படிங்க: பர்த்டே கேர்ள் சாய் பல்லவி புகைப்படத் தொகுப்பு!