அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’ராக்கி’. தொழில்நுட்பம், திரைக்கதை, திரை மொழி என அனைத்திலும் உலகத்தரம் வாய்ந்த திரைப்படமாக ’ராக்கி’ திகழ்ந்தது.
இதனையடுத்து ’ராக்கி’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அருண் மாதேஸ்வரன், செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணையும் ’சாணிக்காயிதம்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.