நெல்லை:தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் நடிகர், வில்லன் என தொடர்ந்து குணச்சித்திர நடிகராக என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
குறிப்பாக நடிகர் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில், விஜயகுமார் நாட்டாமை கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பெயர் பெற்றார். ’நீதிடா, நேர்மைடா’ என்கிற இவரது வசனம் மிகவும் புகழ்பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில் நடிகர் விஜயகுமார் திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது திடீரென உயிரிழந்துவிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவின.