SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் நெட்பிலிக்ஸ், ZEE5 போன்ற ஓடிடி தளங்களை தொடர்ந்து ஹாட்ஸ்டாரிலும் வெளியாகி உள்ளது.
டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமாகி வருகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.