ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், ஸ்ரேயா ரெட்டி, அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிகளைத் தாண்டி வசூலித்து சாதனைப் படைத்தது. அதுமட்டுமின்றி ஜீ 5 ஒடிடி தளத்தில் திரையிடப்பட்டபோது 1000 மில்லியன் மணி நேரத்திற்கும், நெட்பிளிக்ஸ் தளத்தில் 45 மில்லியன் மணி நேரத்திற்கு மேலாகவும் இந்தப் படம் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்தின் தலைமை செயல் அலுவலர் டெட் சரண்டோஸ், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் இப்படம் 100 நாட்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. ஓடிடியில் வெளியானாலும் இன்னும் பல திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
100 நாட்களைக் கடந்து வெற்றி நடைபோடும் 'ஆர்ஆர்ஆர்' - ram charan
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.
100 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் ”ஆர்ஆர்ஆர்”