தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யுவனுக்காக ஒரு உலக சாதனை - அசத்திய மாணவர்கள் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பிளாக்‌ஷிப் நிறுவனமும், SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின் வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்

யுவனுக்கு வெள்ளி விழா பரிசு
யுவனுக்கு வெள்ளி விழா பரிசு

By

Published : Oct 12, 2022, 7:09 PM IST

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இசை உலகின் வெள்ளி விழா பரிசாக விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் "லவ் யூ யுவன்" எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை பார்க்க மட்டுமே அழைக்கப்பட்ட யுவனுக்கு, அவருக்காக காத்திருக்கும் இந்த உலக சாதனை முயற்சியே சொல்லப்படவில்லை என்பது அவருக்கு கூடுதல் ஆச்சர்யம் மகிழ்ச்சியைத் தரவே, ஆடிப் பாடி அசத்தினார் யுவன் சங்கர் ராஜா.

இதன்படி ஒரே நேரத்தில் 11,000 மாணவர்கள் யுவனின் பில்லியன் பார்வையாளர்களை கடந்த ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிப் பாடி சாதனை படைத்தனர். இது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , மற்றும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களால், உலக சாதனையாக உடனடியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி அக்டோபர் 8ஆம் தேதி கோவை சரவணம்பட்டியில் SNS நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதே நிகழ்வில் விரைவில் வெளிவரவிருக்கும் பிளாக் ஷிப் தொலைக்காட்சியின் லோகோ பிரம்மாண்டமாக யுவனால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளாக்‌ஷிப் டிவியின் விளம்பரங்களுக்கான தூதராக வைகைப் புயல் வடிவேலு என்பதை தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டது. இதுவே வடிவேலு விளம்பர தூதராக களமிறங்கும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யுவனுக்கு வெள்ளி விழா பரிசு

மேலும் டிசம்பர் 25ஆம் தேதி தூத்துக்குடி, டிசம்பர் 31 கோயம்புத்தூர், ஜனவரி 1, 2023 திருச்சி ஆகிய ஊர்களில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டது பிளாக்‌ஷிப் டிவி. நிகழ்வினை, பிளாக் ஷிப் நிர்வாகிகளும் நடிகர்களுமாகிய சுட்டி அரவிந்த் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ் தொகுத்து வழங்கினர்.

இதையும் படிங்க: 'கியூட் பொண்ணு' பிக்பாஸ் ஜனனி புகைப்படத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details