தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கமலிடம் முத்தம் பெற்ற ரோபோ சங்கர்! - விக்ரம்

நடிகர் ரோபோ சங்கர் இன்று (ஜூன் 16) நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அன்பான முத்தங்களை பெற்றுள்ளார்.

கமலிடம் முத்தம் பெற்ற ரோபோ சங்கர்!
கமலிடம் முத்தம் பெற்ற ரோபோ சங்கர்!

By

Published : Jun 16, 2022, 10:49 PM IST

நடிகர் ரோபோ ஷங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது நாம் அறிந்ததே. வருடம்தோறும் கமல்ஹாசன் பிறந்தநாள் வந்துவிட்டால் முதல் வேலையாக அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்வது அவரது வழக்கம். இந்நிலையில், பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளுக்கு நேரில் சென்று கமல்ஹாசன் என்ட்ரியின் போது ஆரத்தி எடுத்து தடபுடலாக கொண்டாடிய ரோபோ ஷங்கரை இன்று (ஜூன் 16) நேரில் அழைத்து சந்தித்தார் கமல்ஹாசன்.

குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர் ஆண்டவரிடம் அன்பாக முத்தத்தைக் கேக்க, அவரும் கன்னத்தில் முத்தத்தைக் கொடுக்க திக்குமுக்காடிப் போன ரோபோ ஷங்கர் உற்சாகத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: தன் குரல் சரியில்லாததால் 'ரீ-டப்பிங்கில்' இறங்கிய அண்ணாச்சி..!

ABOUT THE AUTHOR

...view details