தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பில்லா பாண்டி மோசமான படம் என்ற கதாநாயகி - கடுப்பான ஆர்கே.சுரேஷ்! - kaalangalil aval vasantham movie

கதாநாயகியான இந்துஜா தான் அறிமுகமான பில்லா பாண்டி படத்தை, நடித்த படங்களில் மிகவும் மோசமாக படம் என்று கூறியுள்ளார். சினிமாவில் அனுசரித்து இருக்க தெரிந்துகொள்ள வேண்டும், என ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பில்லா பாண்டி மோசமான படம் என்ற கதாநாயகி - கடுப்பான ஆர்கே.சுரேஷ்!
பில்லா பாண்டி மோசமான படம் என்ற கதாநாயகி - கடுப்பான ஆர்கே.சுரேஷ்!

By

Published : Oct 14, 2022, 4:05 PM IST

”காலங்களில் அவள் வசந்தம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சிவி குமார், நடிகர் ஆர் கே சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆர் கே சுரேஷ்,

”இப்போது உள்ள கால கட்டத்தில் அழகான காதல் கதைகள் எல்லாம் வெற்றி பெரும். மலையாள படங்கள் மட்டுமல்லாமல் இங்கும் நல்ல வெற்றி கிடைக்கும். தற்போது வரை அரங்கம் நிறந்து ஓடிக்கொண்டு உள்ளது ”பொன்னியின் செல்வன்” அதுவே மகிழ்ச்சியாக உள்ளது.

இன்று காலை முகநூலில் ஒரு வீடியோ வந்தது. கதாநாயகி இந்துஜாவை நாம் தான் ’பில்லா பாண்டி’ என்ற படத்தில் அறிமுகம் செய்தோம். ஆனால் அவரிடம் நீங்கள் நடித்த படங்களில் மிகவும் மோசமான படம் எது என்று கேட்ட போது ’பில்லா பாண்டி’ என்று சொல்லியுள்ளார்.

அஜித் ரசிகனாக தான் அந்த படத்தை எடுத்து இருப்போம். அஜித் ரசிகனாக நடித்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமாவில் எது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். சமந்தா தற்போது எங்கேயோ சென்று விட்டார். இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.

சினிமாவில் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினியை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் அவர் போன்று அனுசரித்து இருக்க வேண்டும். நாளை பெரிய இடத்திற்கு வந்தால் இதை நினைவில் வைத்து கொள்ளவும் அதற்காக தான் இதை சொன்னேன்”, என்றார்.

இதையும் படிங்க:மூன்று மொழியில் முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி...

ABOUT THE AUTHOR

...view details