சென்னை: இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமான ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர்.ஜே.விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. ஜீவா, அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர்ஜே விஜய், எல்ஜிஎம் (LGM) உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மோதல்களை கதைக்களமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.