தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..! - லோகேஷ் கனகராஜ்

Singapore Saloon Movie Release Date: ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழுனர் அறிவித்துள்ளனர்.

RJ Balaji Singapore Saloon Movie Release Date Announcement
ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:06 PM IST

சென்னை: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனியார் ரேடியோவில் ஆர்ஜே வாக இருந்து சுந்தர்‌.சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தார்.

அவரது வேகமான வசன உச்சரிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து 'எல்கேஜி' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். பின்னர், மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினார். இவரது இயக்கத்தில் கடைசியாக 'ரன் பேபி ரன்' என்ற படம் வெளியானது.

இந்த நிலையில், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தில் நடித்துள்ளார். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம், ரன் பேபி ரன் படங்களை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.

மேலும், இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சத்யராஜ், லால் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கதையை இயக்குநர் கோகுல், லோகேஷ் கனகராஜ் இடம் கூறிய‌போது இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் இதனை அடுத்து. ஆர்.ஜே.பாலாஜியும் கதையைக் கேட்டு நடிப்பதாக ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

விவேக்-மெர்வின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ஜனவரி 25ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கதாநாயகனாக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்!

ABOUT THE AUTHOR

...view details