தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன்! - GV Prakash Kumar

மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்க, ஜிவி பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் ஜி.வி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன்
மீண்டும் இணையும் ஜி.வி பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன்

By

Published : May 31, 2022, 4:16 PM IST

சென்னை: ஜிவி பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் ‘செல்ஃபி’ என்னும் படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த வெற்றிக் கூட்டணி, இப்போது '13' என்ற தலைப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் S நந்த கோபால், மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒரு சந்தேகத்திற்குரிய விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குநராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன்), ஸ்டண்ட் மாஸ்டர் - ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, பீட்சா 3), நடன இயக்குநர் - சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால்), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இதையும் படிங்க:இளையராஜா சதாபிஷேக விழாவில் யுவன் 'ஆப்சென்ட்'

ABOUT THE AUTHOR

...view details