ட்விட்டரில் ஓய்வுபெற்ற விமானப்படை அலுவலர் ஒருவர், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றிருந்த விஜய் பைட் ஜெட் ஓட்டும் காட்சியை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரின் பதிவின் கீழேயே விஜய் ரசிகர்கள் அவரை வசைபாடினர்.
இந்த இணையச்சண்டை ஒரு கட்டத்தில் முற்றிப்போய், இந்திப் பட ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்குமான சண்டையானது. இந்திப்படங்களில் இடம்பெற்றிருந்த அபத்தமான சண்டைக் காட்சிகளை எடுத்து விஜய் ரசிகர்கள் பதில் ட்ரோல் செய்தனர். இச்சண்டை தொடர் சங்கிலியாய் நீள, சமூகவலைதளமே கலவரக்காடானது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியானது.