மகாராஷ்டிரா:பிரபல கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் அவரது N.D. ஸ்டுடியோவில் வைத்து தற்கொலை செய்துள்ளார். இன்று காலை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது ஸ்டுடியோவின் உள்ளே நிதின் சந்திரகாந்த் தேசாய் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறை மற்றும் அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்ப இடத்திற்கு வந்த கர்ஜாத் காவல்துறை அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் காவல்துறையின் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹிந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நிதின் சந்திரகாந்த் தேசாயின் இறப்பு திரை பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அவரின் இழப்புக்கு இறங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கலை மற்றும் புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிதின் சந்திரகாந்த் தேசாய் 1942 எ லவ் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, ஹம் தில் தே சுகே சனம், தேவதாஸ், லகான், ஜோதா அக்பர் மற்றும் பிரேம் ரத்தன் தன் பாயோ போன்ற பல குறிப்பிடத் தக்க படங்களில் தனது கலை திறமையின் தனித்துவத்தைக் காண்பித்திருப்பார்.