சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல நடிகர் அஜித்தின் ’துணிவு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. ’துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. ’வாரிசு’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடுகிறது.
’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு - ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ்
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் கோவை வெளியீட்டு உரிமையை வாங்கிய ரெட் ஜெயண்ட் சென்னை உரிமத்தையும் வாங்கியது.
வாரிசு திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் படத்தை விநியோகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இருப்பினும் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட, தென் ஆற்காடு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் தொடங்கிய 'சூர்யா 42' படப்பிடிப்பு!