அரண்மனை-3 படத்திற்குப்பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள படம் 'காஃபி வித் காதல்'. குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும், முக்கியக் கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.