தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்! - ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ்

நடிகர் அமீர்கான் நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ என்ற படத்தின் தமிழ்ப்பதிப்பை தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது.

அமீர் கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
அமீர் கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

By

Published : Jul 16, 2022, 10:17 PM IST

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், பல முக்கிய தமிழ் சினிமாக்களை வழங்கி வருகிறது. இந்தப்பட்டியலில் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது.

இதையும் படிங்க: மவுசு குறையாத ரஜினியின் படத் தலைப்புகள்

ABOUT THE AUTHOR

...view details