இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ராட்சசன் திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ராட்சசன் 2 வெளியீடு குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராட்சசன் படத்தின் போஸ்டரையும், இயக்குநர் ராம்குமாரை டேக் செய்து அவர் பதிவிடுள்ள ட்விட்டர் பதிவில், 'அனைவருக்கும் விரைவில் ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார். எனவே ராட்சசசன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவிகளை கொல்லும் வித்தியாசமான சைக்கோ படமாக வெளியான இந்தப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு மட்டுமின்றி படத்தில் பணியாற்றியவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக படத்தில் சைக்கோவாக நடித்த சரவணனின் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. படம் வெளியானவுடன் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் விஷ்ணு விஷாலின் இந்தப் பதிவு ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:மணமுடிக்க உள்ளாரா ஹரிஷ் கல்யாண்..?; ஜோடி இவரா...?