ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "ரத்தசாட்சி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம், பிரபல எழுத்தாளரும் "பொன்னியின் செல்வன்" மற்றும் "வெந்து தணிந்தது காடு" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஜெயமோகனின் படைப்புகளின் ஒன்றான "கைதிகள்" என்னும் சிறுகதையாகும்.
ஜெயமோகனின் கூற்றுப்படி, ”ரத்தசாட்சி உருவானக் கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்கத் தகுதியானது. ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி கைதிகள் கதையை திரைப்படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார். அவர் மட்டுமின்றி கதையின் உரிமையைப் பெற பிரபல இயக்குநர் வெற்றிமாறன் என்னை அணுகினார். ஆனால் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்" என கூறியுள்ளார்.