தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

போலி வீடியோ விவகாரத்தில் 36 மணிநேரத்தில் நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்த ராஷ்மிகா! - etv bharat news

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா சமூக ஊடக தளத்தில் வெளியான deep fake வீடியோ வைரலான 36 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வீடியோவை அகற்றியதற்கும், ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Rashmika Mandanna
ராஷ்மிகா மந்தனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 3:52 PM IST

ஹைதராபாத்:தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா நாயகியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ எக்ஸ்(X) தளம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

இது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இணையத்தில் செயற்கை தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி வைரலாகி வரும் deep fake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. இந்த விவகாரம் எனக்கு பயத்தை உண்டாக்குகிறது என தெரிவித்தார். அதன்பின், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இதனை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது "X" தளத்தில் தெரிவித்தார்.

இந்த போலி வீடியோ விவகாரத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைத்துறையை சேர்ந்த மிருணாள் தாகூர், நாக சைதன்யா, சின்மயி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்தார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக ஊடக தளத்தில் வெளியான deep fake வீடியோ வைரலான 36 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து deep fake வீடியோவை அகற்றியதற்கும், ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:லேபில் வெப் தொடரில் அதிக ஆபாச வார்த்தைகள் - செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழு அளித்த பதில்!

ABOUT THE AUTHOR

...view details