டெல்லி:கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால், இந்த வீடியோ வேறு ஒரு மாடலின் வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வீடியோவாகும். தற்போது இது போன்ற பல நடிகைகள் மட்டும் அல்லாமல் பல பெண்களின் முகங்களையும் Deep Fake மற்றும் AI போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தனது மார்பிங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது X பக்கத்தில்,
- சமூக வலைத்தளங்களில் பரவி வரும் Deep Fake வீடியோ குறித்துப் பேச மிகவும் வேதனைப்படுவதாகவும், இந்த சம்பவம் எனக்கு மட்டும் அல்ல அனைவரையும் பயப்பட வைக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
- தற்போது ஒரு பெண்ணாகவும் ஒரு நடிகையாகவும் இருந்து வரும் எனக்கு எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் பாதுகாப்பான அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்த வீடியோ பதிவு எனது பள்ளி அல்லது கல்லூரி காலகட்டத்தில் வெளியிடப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு எதிர் கொண்டு இருப்பேன் எனத் தெரியவில்லை.
- இது போன்ற அடையாளம் திருட்டு காரணமாக நம்மில் பலர் பாதிப்பு அடைவதற்கு முன்பு அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த பதிவில், சைபராபாத் போலீஸ், சைபர் கிரைம் மற்றும் மகாராஷ்டிரா சைபர் துறை ஆகியவற்றை டாக் (tag) செய்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவு குறித்து மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது X பக்கத்தில், "தற்போது நரேந்திர மோடி அரசு அனைத்து சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்க அனைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.