தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Rashmika: ரூ.80 லட்சம் மோசடி - நீண்ட கால மேனேஜரை நீக்கினார் ராஷ்மிகா! - நடிகை ராஷ்மிகா செய்தி

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட காலமாக மேலாளராக பணிபுரிந்த நபர், அவரிடம் 80 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த நபரை ராஷ்மிகா பணியிலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

Rashmika
நடிகை

By

Published : Jun 19, 2023, 5:27 PM IST

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் அறிமுகமானவர். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மாறினார். அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில், நாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.

இப்படம் ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் நாயகியான அறிமுகமானார். இதையடுத்து, நடிகர் விஜயின் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

இந்தியில் ராஷ்மிகா நடித்த த்ரில்லர் படமான மிஷன் மஜ்னு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் "அனிமல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதையும் படிங்க:Adipurush Box Office: சர்ச்சைகளை கடந்து பாக்ஸ் ஆபிஸில் அள்ளிய ஆதிபுரூஷ்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதேபோல், புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகாவிடம் மேலாளராக இருந்த நபர், அவரிடம் பண மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவிடம் இருந்து சுமார் 80 லட்சம் ரூபாயை அந்த நபர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும், ராஷ்மிகா உடனடியாக அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக மேலாளராக பணிபுரிந்தவர் பணத்தை ஏமாற்றியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா எதுவும் கூறவில்லை. தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலம் முதல் தன்னிடம் பணிபுரிந்தவர் பணத்தை ஏமாற்றியதால், அதை ராஷ்மிகா பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Adipurush Box Office: சர்ச்சைகளை கடந்து பாக்ஸ் ஆபிஸில் அள்ளிய ஆதிபுரூஷ்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details