தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சமூக வலைதளங்களில் வைரலாகும் ரன்வீர் சிங்கின் நியூட் போட்டோஷூட்! - ரன்வீர் சிங்

தனியார் மேகசின் ஒன்றுக்காக சமீபத்தில் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ரன்வீர் சிங்கின் நியூட் போட்டோஷூட்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் ரன்வீர் சிங்கின் நியூட் போட்டோஷூட்!

By

Published : Jul 22, 2022, 2:00 PM IST

பாலிவுட்டைச் சேர்ந்த ரன்வீர் சிங் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் பிரபலமடைந்தவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’83’ பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தியா முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடித்திருந்தார்.

வித்தியாசமான கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமின்றி தனது வித்தியாசமான ஃபேஷன் உடைகளுக்கும் பெயர் போனவர், ரன்வீர். இந்நிலையில் அவர் தனியார் மேகசின் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டோஷூட் குறித்து ரன்வீர் சிங் கூறுகையில், ”எனக்கு உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது.

என் ஆன்மாவை நீங்கள் பார்க்க முடிந்தால் தெரியும், அது எவ்வளவு நிர்வாணமானது என? அது தான் உண்மையில் நிர்வாணம். ஆயிரம் பேருக்கு முன்னால் நான் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அவர்கள் தான் அசௌகரியம் அடைவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஒரே அறையில் வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்தால்... - நாக சைதன்யா குறித்து சமந்தா!

ABOUT THE AUTHOR

...view details