தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆர்ஆர்ஆர் பட நடிகையை மணக்கிறார் ரன்பீர் கபூர்! - ரன்பீர் கபூர்

பாலிவுட்டில் புகழ்பெற்ற கபூர் குடும்பத்தின் மருமகளாக ஆர்ஆர்ஆர் பட நடிகை ஆலியா பட் விரைவில் இணையவுள்ளார். ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் ஏப்.15ஆம் தேதி நடைபெறுகிறது.

Ranbir Kapoor
Ranbir Kapoor

By

Published : Apr 7, 2022, 12:13 PM IST

ஹைதராபாத்: ரன்பீர் கபூர்- ஆலியா பட் திருமணம் வருகிற 15ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தகவலை இரு வீட்டாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஏப்.13ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஏப்.14ஆம் தேதி மஞ்சள் பூசும் நிகழ்வும், நிறைவாக ஏப்.15ஆம் தேதி திருமணமும் நடைபெறுகிறது.

இந்தத் திருமணம் ஆர்கே ஸ்டுடியோவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. இந்தத் திருமண நிகழ்வில் கரீனா கபூர், சயீப் அலி கான், கரீஷ்மா கபூர் உள்ளிட்ட முழு கபூர் குடும்பமும் கலந்துகொள்ளவுள்ளது.

இவர்கள் தவிர இயக்குனர்கள் அயன் முகர்ஜி, கரண் ஜோகர், அகன்யா ரஞ்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். மேலும் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஆகும்.

இதையும் படிங்க : காதலர் நாளில் திருமணம் செய்த ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details