தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”ரம்பம் பம் ஆரம்பம்”... சுந்தர்.சி - யுவன் கூட்டணியில் வெளியான ரீமிக்ஸ் பாடல் - remix song

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகவுள்ள 'காபி வித் காதல்' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

”ரம்பம் பம் ஆரம்பம்”...சுந்தர்.சி யுவன் கூட்டணியில் வெளியான ரீமிக்ஸ் பாடல்
”ரம்பம் பம் ஆரம்பம்”...சுந்தர்.சி யுவன் கூட்டணியில் வெளியான ரீமிக்ஸ் பாடல்

By

Published : Jul 2, 2022, 2:43 PM IST

அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல்'. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கலகலப்பான காதல் கதையாக உருவாகி உள்ளது ’காபி வித் காதல்’. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

எப்போதுமே இயக்குநர் சுந்தர்.சியின் படங்களில் நிச்சயமாக குடும்ப நடனப்பாடல் ஒன்று தவறாமல் இடம்பெறுவது வழக்கம். இதற்கு முன்னதாக 'ஆம்பள' படத்தில் இன்பம் கொஞ்சும் வெண்ணிலா வீசுதே, 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்தில் 'வாங்க மச்சான் வாங்க', ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக்கால ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் படமாக்கி இருப்பார், சுந்தர்.சி.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள ’காபி வித் காதல்’ படத்திலும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் பாடல் குடும்ப நடனப் பாடலாக இடம் பெற்றுள்ளது. கமலும் குஷ்பூவும் இணைந்து நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் எஸ்பிபியும் சித்ராவும் இணைந்து பாடிய "ரம்பம் பம் ஆரம்பம்” என்கிற பாடல் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. படத்தில் நடித்த
நட்சத்திரங்கள் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவது போல இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'யானை' வெற்றியையடுத்து அருண் விஜய்யை வாழ்த்திய கார்த்தி!

ABOUT THE AUTHOR

...view details