தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராம் சரண் கொடுத்த தீபாவளி ட்ரீட்.. ஒன்று கூடிய தெலுங்கு முன்னணி பிரபலங்கள்! - telugu movies

Telugu actors together: தீபாவளியை முன்னிட்டு நடிகர் ராம் சரணின் இல்லத்தில், முன்னனி தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், வெங்கடேஷ் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ram charan diwali house party
ராம் சரண் கொடுத்த தீபாவளி ட்ரீட்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 8:18 AM IST

ஹைதராபாத்:தெலுங்கு நடிகர் ராம் சரண் உப்பாசன தம்பதியினர் தீபாவளியை முன்னிட்டு, நேற்றைய முன்தினம் (நவ.11) ஹைதராபாத்தில் உள்ள தங்களது இல்லத்தில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று தீபாவளி திருநாளில் விருந்தில் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைராகி வருகிறது.

அதில், தெலுங்கு திரையுலகின் நான்கு முன்னனி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், வெங்கடேஷ் மற்றும் மகேஷ் பாபு ஆகியோருடன் ராம் சரண் எடுத்த புகைப்படத்தை நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஒரே பிரேமில் தெலுங்கு நட்சத்திரங்கள் ஒன்றிணைந்ததைக் கண்ட ஏராளமான ரசிகர்கள், ஆர்வத்துடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

மேலும், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர்கள் ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதில் ஒரு ரசிகர், “ஒரே பிரேமில் நான்கு லெஜண்டுகள்” எனவும், மற்றொருவர் “ஆகா என்ன ஒரு புகைப்படம்” எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' படம் வெற்றியடைந்தது. மகேஷ் பாபு தற்போது 'குண்டூர் காரம்' மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து நடிக்கும் படத்திற்குத் தயாராகி வருகிறார். ராம் சரண் தமிழ் இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சரில்' நடித்து வருகிறார். அதேநேரம், ஜூனியர் என்டிஆர்யின் 'தேவாரா' படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. மறுபுறம் நடிகர் வெங்கடேஷ் நடித்த 'சைந்தவ்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மகதீரா என்ற படம் மூலம் அறிமுகமாகி, இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடித்திருந்த 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் இந்த வருடத்தின் ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க:கங்குவா போஸ்டர் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா..!

ABOUT THE AUTHOR

...view details