நடிகர் மாதவன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’, இப்படம் சமீபத்தில் வெளியாகி பலதரப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தை பாராட்டி ட்வீட் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், ’ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷண் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார், மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:'கஜினி' படத்தின் கதை எனக்குப்பிடிக்கவில்லை - ரகசியம் உடைத்த மாதவன்!