தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு! - கோயில் கும்பாபிஷேகம்

Ayothi Ramar Temple Kumbabishekam: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ayothi Ramar Temple Kumbabishekam
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பிதழ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 2:33 PM IST

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழ் வழங்குவதற்காக, இன்று (ஜன.2) சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச் செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் சென்று அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாக கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக கூறி அழைப்பிதழைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கான ஏற்பாடுகளை ராமர் கோயில் அறக்கட்டளை செய்து வருகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாது காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற கட்சியின் தலைவர்களுக்கும் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பல்வேறு சட்டவிரோத செயல்களுக்காக மாறிவரும் வீட்டு வசதி வாரியம்? அரசு ஊழியர்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details