தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! - ராணா டகுபதி

Thalaivar 170 Shoot Started: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள “தலைவர் 170” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar 170
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:58 PM IST

சென்னை:இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள திரைப்படம், “தலைவர் 170”. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று (அக்.3) சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் கூறுகையில், “திருவனந்தபுரத்திற்கு 170வது படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெயர் என்ன என்பது தாமதமாக தெரியும். ஜெயிலர் படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்து உள்ளது. 170வது படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் “தலைவர் 170” படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகரான ராணா டகுபதி, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், “தலைவர் 170” படத்திற்கான படப்பிடிப்பு அக்.4இல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என படக்குழு சார்பில் X தளத்தில் அப்டேட் வெளியாகி உள்ளது.

அந்த பதிவில், “Lights, Camera, Clap, ACTION என்ற கேப்ஷ்ன் உடன் ரஜினிகாந்த் புகைப்படத்தை படக்குழுவினர் பகிர்ந்து உள்ளனர். மேலும், இது படப்பிடிப்பிற்கான நேரம். படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. படப்பிடிப்பு நடக்கும்போது பல விதமான அப்டேட்கள் வெளியாகும்” என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பிற்கு திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளயானி வேளாண் கல்லூரி மற்றும் சங்குமுகம் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து உள்ளார். இந்த படம் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள “தலைவர் 171” திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அமிதாப் ரஜினி கூட்டணி.. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் தலைவர் 170!

ABOUT THE AUTHOR

...view details