சென்னை:நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார் என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் நடைபெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு ரஜினிகாந்த் மற்றும் மோகன் லால் இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.