சென்னை:நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் மலேசிய சுற்று பயணம் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்துள்ளார். இது குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினியுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்த செய்தியை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், தான் ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலை உலகில் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை சந்தித்ததாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் மலேசியாவின் மக்களின் கஷ்டங்களை பற்றி கேட்டதாகவும், அவருடைய அடுத்து வெளி வரக்கூடிய படங்களை குறித்து பகிர்ந்ததாகவும், தான் அவர் மென்மேலும் புகழ் பெற இறைவனை பிராத்திப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஜெயிலர் படத்தின் வெளியீடு சமயத்தில் ஆன்மீக பயண்மாக இமையமலை சென்ற ரஜினிகாந்த், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தது ரசிகர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் தற்போது மலேசிய நாட்டு பிரதமரையும் நடிகர் ரஜினிகாந்த் சந்திதுள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை வரவேற்கும் போது மலேசிய பிரதமர் அனவர் இப்ராஹிம், ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் ரஜினி செய்யும் மொட்டை பாஸ் செய்கையை செய்து கூறப்படுகிறது