தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். அதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவர் மட்டுமின்றி மகள் இந்திரஜாவும் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து, தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ சங்கர் மற்றும் பிரியங்கா ஜோடி தங்களது 22வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.