தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறைவு - ரஜினிகாந்த் இரங்கல் - Jailer update

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்த வி.எம்.சுதாகர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறைவு - ரஜினிகாந்த் இரங்கல்!
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறைவு - ரஜினிகாந்த் இரங்கல்!

By

Published : Jan 6, 2023, 12:13 PM IST

Updated : Jan 6, 2023, 12:31 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர், சுதாகர் (71). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதால், தனது மக்கள் மன்றத்தை ரசிகர் மன்றமாக மாற்றினார். இந்த நிலையில் சுதாகர் கடந்த சில ஆண்டுகளாக சுதாகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

அப்போது ரஜினிகாந்த் சுதாகருக்கு உதவவில்லை என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் சுதாகர் அதனை மறுத்திருந்தார். ரஜினி தனக்கு எப்போதும் தார்மீக உதவி செய்யத் தவறியதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று (ஜன.6) சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் தனுஷ் போலி ஆவண வழக்கு: மேலூர் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!

Last Updated : Jan 6, 2023, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details