சென்னை: 2020ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(ஜூலை 22) மாலை அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கோரா இயக்கத்தில் உருவான ’சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதைக்கான, சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இன்று (ஜூலை 24) பிறந்த நாள் காணும் சூர்யாவிற்கு இது ஒரு பிறந்த நாள் பரிசாகவும் அமைந்துள்ளது. இதனிடையே நடிகர் சூர்யாவுக்கும், தேசிய விருது பெற்ற படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.