தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறித்து ரஜினிகாந்த் - ரஜினிகாந்த்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தைக் கண்ட நடிகர் ரஜினிகாந்த் அதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - நட்சத்திரம் நகர்கிறது குறித்து ரஜினிகாந்த்
’உங்கள் படைப்புகளிலேயே இதுதான் சிறந்தது..!’ - நட்சத்திரம் நகர்கிறது குறித்து ரஜினிகாந்த்

By

Published : Sep 4, 2022, 10:37 PM IST

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் , நடிகர்கள் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் மற்றும் பலர் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ’நட்சத்திரம் நகர்கிறது’. ஆணவக்கொலை, தன்பாலின ஈர்ப்பாளர்கள், சமீப கால காதல், சாதியம் என பல கருத்துகளை ஒரு பின்நவீனத்துவ அணுகுமுறையோடு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’ .

இயக்குநர் பா. இரஞ்சித் தன் வழக்கமான பாணியைத் தாண்டியும் ஒரு பரிட்சாத்திய முறையில் இப்படத்தை அணுகியுள்ளார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது இந்தப் படத்தைக் கண்ட நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பா. இரஞ்சித்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியது மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளது. ‘இது தான் இதுவரை நீங்கள் செய்ததில் உங்களின் சிறந்த படைப்பு, கலை ரீதியாகவும், எழுத்து ரீதியாகவும், நடிப்பு ரீதியாகவும், இசை ரீதியாகவும், ஒளிப்பதிவு ரீதியாகவும் இயக்க ரீதியாகவும்’ என்ற வார்த்தைகளைக் கூறி பாராட்டினார். மிக்க நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சினம் படத்திற்காக ஊர் சுற்றிய அருண் விஜய்..!

ABOUT THE AUTHOR

...view details