தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"தலைவர் 169" ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - thalapathy 66

சன் பிக்சர்ஸிடம் தலைவர் 169 படத்திற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்டுள்ளதாகவும் இதனை கொடுக்க சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெல்சனை நம்பி அகலக்கால் வைக்கும் ரஜினி?
நெல்சனை நம்பி அகலக்கால் வைக்கும் ரஜினி?

By

Published : May 21, 2022, 8:41 PM IST

Updated : May 22, 2022, 7:44 AM IST

தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்காக விஜய் 125 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது ரஜினியின் முந்தைய சம்பளத்தை விட அதிகமாம்.

இந்நிலையில் தலைவர் 169 படத்திற்கு ரஜினிகாந்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளத்தை கொடுக்க முன்வந்துள்ள தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ், அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் படங்கள் விமர்சன ரீதியாக வேறுபட்ட கருத்தை பெற்றாலும், வசூலில் வெற்றி பெற்று விடும். இருந்தாலும் ஒருவேளை சரியாக ஓடவில்லை என்றால் சம்பளத்தில் பாதியை திருப்பித்தர வேண்டும் என்ற நிபந்தனை பேச்சுவார்த்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு ரஜினியும் சரி என்று சொன்னதாக கூறப்படுகிறது. 150 கோடி ரூபாய் சம்பளம் தமிழ் மட்டுமின்றி, இந்திய திரையுலகிலேயே இதுவரை யாரும் வாங்கியிராத சம்பளம் என கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து அகில இந்திய அளவில் மேலும் உயரும் என ரசிகர்கள் பூரிக்கின்றனர்.

இதையும் படிங்க:’நெஞ்சுக்கு நீதி’ வெற்றி - இயக்குனருக்கு உதயநிதி நன்றி!

Last Updated : May 22, 2022, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details