சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் நேற்று (ஜூன் 24) வெளியான திரைப்படம் ’மாமனிதன்’. இந்தப் படம் வழக்கமான சினிமாவை போலல்லாமல் எதார்த்த சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமியின் தனுத்துவம் என்றும் கூறலாம்.
இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினரை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.