தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக் - இயக்குநர் நெல்சன் திலீப் குமார்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

Etv Bharatரஜினிகாந்த் ஜெயிலர்ன் பர்ஸ்ட் லுக்  வெளியானது
Etv Bharatரஜினிகாந்த் ஜெயிலர்ன் பர்ஸ்ட் லுக் வெளியானது

By

Published : Aug 22, 2022, 11:12 AM IST

Updated : Aug 22, 2022, 11:22 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் புதிய அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 21) வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை சன் பிக்சர்ஸ் இன்று அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக நெல்சன் திலீப் குமார் இயக்கிய பீஸ்ட் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், ரஜினிகாந்தின் ஜெயிலர் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்த்தில் ரஜினியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.

இதனை படக்குழுவினர் மறுத்தனர். இதனையடுத்து கடந்த மாதம் தரமணி வசந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியானது. இன்று வெளியிட்டுள்ள போஸ்டரை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோப்ரா ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Updated : Aug 22, 2022, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details