நடிகர் விக்ரம் பிரபு தேர்ந்தெடுக்கும் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்கள், திரைப்பயணத்தில் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன. அவரது முந்தைய படமான 'டாணாகாரன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அடுத்ததாக வரவிருக்கும் ‘ரெய்டு’ திரைப்படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பிரபுவின் அட்டகாசமான தோற்றம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், அசத்தலான தலைப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. ரெய்டு திரைப்படத்தை கார்த்திக் இயக்குகிறார். S.K. கனிஷ்க், GK (எ) G.மணிகண்டன் தயாரிக்கின்றனர்.