தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடங்கியது - mm keeravani

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூலை 15) மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடங்கியது!!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடங்கியது!!

By

Published : Jul 16, 2022, 1:46 PM IST

ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்திலும் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நேற்று (ஜூலை 15) தொடங்கியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அதிக பொருட்செலவில் 'சந்திரமுகி 2' திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தையும் 'சந்திரமுகி' முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்குகிறார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடங்கியது

‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீராவணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிங்க: விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பூஜையுடன் தொடங்கியது!!

ABOUT THE AUTHOR

...view details