தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கட்டுமஸ்தாக மாறிய ராகவா லாரன்ஸ்; சந்திரமுகி 2 படத்திற்காக நியூ லுக் - சந்திரமுகி

நடிகர் ராகவா லாரன்ஸ் பி. வாசு இயக்கத்தில் நடித்து வரும் 'சந்திரமுகி 2' படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.

கட்டுமஸ்தாக மாறிய லாரன்ஸ்- சந்திரமுகி 2 படித்திற்காக நியூ லுக்
கட்டுமஸ்தாக மாறிய லாரன்ஸ்- சந்திரமுகி 2 படித்திற்காக நியூ லுக்

By

Published : Sep 13, 2022, 8:17 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடித்து வரும் 'சந்திரமுகி 2' படத்திற்காக தனது உடலை ஏற்றி கட்டுமஸ்தானாக மாறியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து, 'சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை டிரான்ஸ்ஃபார்ம் செய்து வருகிறேன்; இதற்காக உதவிய சிவா மாஸ்டருக்கு நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகவா லாரன்ஸ் தான் வைத்துள்ள அறக்கட்டளை மூலம் பல மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் எனப் பலருக்கும் உதவி வருகிறார். இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ளார். அதில், 'பலரும் தனக்கு உதவும் வகையில் தேவைப்படும்போதெல்லாம் இதுவரை நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி. தான் இப்போழுது மேலும் நிறையப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறேன்.

ஆகையால், இனி மக்கள் சேவை செய்வதை முழுவதுமாக எனது பொறுப்பாக எடுத்துக்கொண்டு, நானே அனைவருக்கும் உதவ உள்ளேன். இதுவரை எனக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இனி யாரும் ’லாரன்ஸ் தொண்டு அறக்கட்டளை’ க்கு நன்கொடை அளிக்க வேண்டாம். உங்களின் அன்பு மட்டுமே போதுமானது.

எனக்கு இதுவரை உதவிய எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் நடத்தவுள்ளேன்', எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விஜய் உடன் இணையும் கேஜிஎஃப் 2 வில்லன்!

ABOUT THE AUTHOR

...view details