தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ‘கர்நாடகா ரத்னா’ விருது - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு! - karnataka ratna award

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருதை வழங்கவிருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

’மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ‘கர்நாடகா ரத்னா’ விருது..!’ - கன்னட முதலமைச்சர் அறிவிப்பு
’மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ‘கர்நாடகா ரத்னா’ விருது..!’ - கன்னட முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Aug 5, 2022, 8:36 PM IST

பெங்களூரூ: கடந்த ஆண்டில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடகா ரத்னா’ விருதை கர்நாடகா மாநிலம் உருவான நாளான (கன்னட ராஜ்யோட்சவா) வருகிற நவ.1 அன்று வழங்கவிருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ‘கர்நாடகா ரத்னா’ விருதை வருகிற நவ.1 அன்று வழங்கவுள்ளோம். மேலும், அதற்கான ஓர் குழுவில் ராஜ்குமார் குடும்பத்தினரையும் இணைத்து, இதை தயாரிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின சிறப்புப்பூக்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்த பின் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்தப் பூக்கள் கண்காட்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு பூக்களை வைத்து சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், கன்னடத்திரையுலகின் முக்கிய நட்சத்திரமுமான புனித் ராஜ் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படும் என்பதை கடந்த ஆண்டில் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியான ‘புனீத நாமனா’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கர்நாடக ரத்னா விருதை கடைசியாக டாக்டர். விரேந்திர ஹெக்டே சமூக சேவைக்காக 2009ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டார்.

மேலும், இந்த விருதை புனீத் ராஜ்குமாரின் தந்தையும் கன்னடத்திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான ‘ராஜ்குமார்’ 1992ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருதை அவர் கவிஞர் குவேம்புவுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டார்.

கன்னடத் திரையுலக ரசிகர்களால் ‘அப்பு’, ‘பவர் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் ’பெட்டதா ஹூவு’ எனும் படத்தில் 6 மாத குழந்தையாக இருந்தபோதெ நடித்து, அதற்கு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். அதன் பின்னர் 2002இல் கதாநாயகனாய் அறிமுகமான புனீத், 29 திரைப்படங்களில் நடித்து அதில் பல வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details