தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது புனீத் ராஜ்குமாரின் ஆவண திரைப்படம் ; ரசிகர்கள் ஆரவாரம்

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி ஆவண திரைப்படமான ‘கந்தாத குடி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

By

Published : Oct 28, 2022, 2:26 PM IST

வெளியானது புனீத் ராஜ்குமாரின் ஆவணத் திரைப்படம் ; ரசிகர்கள் ஆரவாரம்
வெளியானது புனீத் ராஜ்குமாரின் ஆவணத் திரைப்படம் ; ரசிகர்கள் ஆரவாரம்

கர்நாடகா: கடந்த ஆண்டு மாரடைப்பால் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரை(46) கடைசியாக திரையில் காண்பிக்கும் ஆவணத் திரைப்படம் ‘கந்தாத குடி’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் அமோஹவர்ஷா இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த ஆவணத் திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் சுமார் 225 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் நேற்றே(அக்.27) இந்தத் திரைப்படத்திற்கான பிரத்யேகக் காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டது. அதிகாலையிலேயே அலைகடலென புனீத் ரசிகர்கள் திரையரங்குகளைப் படையெடுத்து தங்களது ஆஷ்தான நாயகனை இறுதியாகத் திரையில் கண்டு நெகிழ்ந்தனர்.

வெளியானது புனீத் ராஜ்குமாரின் ஆவணத் திரைப்படம் ; ரசிகர்கள் ஆரவாரம்

கட்-அவுட்களும், பேனர்களுமாக திரையரங்குகளில் அலங்கரித்து பெரும் ஆராவாரத்துடன் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவின் வனவாழ்வியல், வனப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கை அழகியலென அனைத்தையும் பிண்ணிப் பிணைந்து உருவாக்கிய திரைப்படமாக ‘கந்தாத குடி’ திரைப்படம் விளங்கியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வரிவிலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’நெட்டிசன்கள் இணையத்தில் காணுவதை நம்பி விடுகிறார்கள்’ - கர்நாடகா உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details