தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Pulimada Teaser: புலியும் பட்டாம்பூச்சியும்.. வெளியானது 'புலிமடா' டீசர்! - புலியும் பட்டாம்பூச்சியும்

Pulimada Teaser: ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவான 'புலிமடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 4:56 PM IST

சென்னை:ஏ.கே.சாஜன் - ஜோஜு ஜார்ஜ் இணையில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு இன்று (ஆகஸ்ட் 19ஆம் தேதி) வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்.

படத்தின் டீசரில் குறிப்பிட்டு சொல்லும்படி சில விஷயங்கள் உள்ளன. அதனால், டீசர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. ஜோஜுவின் நடிப்புத் திறமை மீண்டும் ஒருமுறை புலிமடா படத்தில் நிரூபணமாகும். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, அதாவது தற்போதே பார்வையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணின் சுகந்தம் (ஒரு பெண்ணின் வாசனை) என்பது படத்தின் டேக் லைனாக உள்ளது. 'பான் இந்தியா' அளவில் வெளிவர இருக்கும் புலிமடா திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோ மோல் ஆகியோர் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் நல்ல திரைப்படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தின் மூலம் எழுத்தாளர், இயக்குனர், எடிட்டர் என மூன்று அவதாரங்களை எடுத்து உள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் படங்களை ஐன்ஸ்டீன் மீடியா ஆண்டனி தயாரித்துள்ளார். பிளாக்பஸ்டர் "இரட்டா" திரைப்படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜின் அடுத்த வெளியீடாக "புலிமடா" திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே மூச்சில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படமாக புலிமடா உருவெடுத்துள்ளது.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமடா படத்தில் லிஜோ மோலும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிளான வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) என்ற கதாபாத்திரத்தின் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் அது கொண்டு வரும் மாற்றங்களும் புலிமடாவின் கதைக்களம் என தெரிவிக்கப்படுகிறது. புலிமடா மூலம் அவரது கதாபாத்திரமும், வாழ்க்கையும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் என படக்குழு தெரிவிக்கிறது. தலைப்பிற்கு ஏற்றாற்போல், ஒரு உண்மையான புலியின் குகை வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார் இயக்குனர்.

ரபீக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், தந்தை மைக்கேல் பனச்சிகல் ஆகியோரின் பாடல் வரிகளில் இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அனில் ஜான்சன் பின்னணி இசையமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக வினேஷ் வங்காளன் இப்படத்தில் பணியாற்றிய நிலையில், ஏ.கே.சாஜன் எடிட்டங்கில் தனது பங்களிப்பை நேர்த்தியாக தந்துள்ளார்.

இதையும் படிங்க: "பெரிய நடிகர்கள் படம் மட்டுமே வெற்றி பெறும் என்பதை மாற்றுவோம்" - கவிஞர் வைரமுத்து!

ABOUT THE AUTHOR

...view details