சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சதீஸ் குமரன் இயக்கத்தில் உருவாகும் படம் “பெண்டுலம்”. இந்த படத்தில் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கின்றனர். சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லராக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, நேற்று பூஜையுடன் தொடங்கியது.
சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் பெண்டுலம் படப்பிடிப்பு தொடக்கம் - Pendulum
சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான உருவாக உள்ள பெண்டுலம் படப்பிடிப்பு தொடங்கியது.
![சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் பெண்டுலம் படப்பிடிப்பு தொடக்கம் பெண்டுலம் படப்பிடிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16262713-thumbnail-3x2-pend.jpg)
பெண்டுலம் படப்பிடிப்பு
20 ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராகவும் பல்வேறு விருதுகளை குவித்த B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் இவர்.
இதையும் படிங்க: பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானார்