தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'பல ஆண்டுகள் கழித்து ஒரு தரமான வரலாற்றுப்படம்..!' - இயக்குநர் ஷங்கர் புகழாரம் - இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மாபெரும் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைக் கண்ட இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

’பல வருடங்கள் கழித்து ஒரு தரமான வரலாற்று படம்..!’ -  இயக்குநர் சங்கர் புகழாரம்
’பல வருடங்கள் கழித்து ஒரு தரமான வரலாற்று படம்..!’ - இயக்குநர் சங்கர் புகழாரம்

By

Published : Oct 5, 2022, 12:30 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்குமுள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் திரைப்படம் குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவர் அந்தப் பதிவில், ''பொன்னியின் செல்வன் மனதை ஆக்கிரமித்து வருகிறது. பல ஆண்டுகள் கழித்து தமிழில் ஒரு தரமான வரலாற்றுத் திரைப்படம். தான் ஒரு ஃபிலிம் மேக்கிங் மாஸ்டர் என மீண்டும் ஒரு முறை மணி சார் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு பாராட்டுகள். இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை காணாத பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. இனி இதனின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் இதை விட அதிகமாகியுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அருள்மொழி வர்மனை பாராட்டிய ரஜினிகாந்த்!!

ABOUT THE AUTHOR

...view details