தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பத்திரிகையாளர்கள் பாராட்டிய 'புரொஜக்ட் சி- சாப்டர் 2' திரைப்படம் - மங்கை மான்விழி அம்புகள் இயக்குனர்

2022ஆம் ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படமாக ‘புரொஜக்ட்- சி சாப்டர் 2’ படம் இருக்கும் என்றும்; நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான படமாக அமையும் எனவும் பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய- ‘புரொஜக்ட் சி- சாப்டர் 2‘
பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய- ‘புரொஜக்ட் சி- சாப்டர் 2‘

By

Published : Dec 23, 2022, 6:21 PM IST

சென்னை:சார்க் பின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் 'புரொஜக்ட் சி - சாப்டர் 2'.

2018ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம்பெறும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்குப் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும்.

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ‘புரொஜக்ட் சி’ வெளியாகியுள்ளது. இதனையொட்டி பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

படம் பார்த்துவிட்டு கருத்துக் கூறிய பத்திரிகையாளர்கள், 'படம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. புதுமுகங்கள் உருவாக்கத்தில் மிக சிறப்பான படைப்பாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் படம் எப்படி போனது என்றே தெரியவில்லை. எளிமையான கருவை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பார்க்காத ட்விஸ்ட்டோடு இயக்குநர் மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் பாராட்டிய 'புரொஜக்ட் சி- சாப்டர் 2' திரைப்படம்

2022ஆம் ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படமாக ‘புரொஜக்ட் சி’ வந்திருக்கிறது. நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான படமாக இது இருக்கும். படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரும் கவனம் பெரும்விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

காமெடி நடிகர் சாம்ஸின் வேடம் வித்தியாசமாக இருப்பதோடு, அவருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்திருக்கிறது. காமெடியை தவிர்த்த வேடங்களிலும் சாம்ஸ் சிறப்பாக நடிப்பார் என்று நிரூபித்திருக்கிறார்'என்று தெரிவித்துள்ளனர்.

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’ தான் முதலில் வெளியாக உள்ளது. பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகு தான், அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஸ்ரீயிடம் கேட்டபோது, 'டிரமாட்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை, என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம்.

படம் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் முதலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறோம். இரண்டாம் பாகத்தைப் பார்க்கும்போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாகப் புரியும் படியும் இருக்கும்' என்றார்.

இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இது தான் முதல் படம். சதீஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

தினேஷ் காந்தி படத்தொகுப்பு செய்துள்ளார். பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருப்பதால் ‘புரொஜக்ட் சி’ படக்குழுவினர் உற்சாகமடைந்திருப்பதோடு, ரசிகர்களிடமும் படம் பாராட்டு பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:பழம்பெரும் நடிகர் சத்தியநாராயணா காலமானார்

ABOUT THE AUTHOR

...view details