தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இறைவன்' படம் ஒரு மைல்கல்லாக அமையும் - தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் - fashion studio

ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் "இறைவன்" (iraivan) திரைப்படம் எங்களது ஒட்டுமொத்த குழு மற்றும் பேஷன் ஸ்டுடியோஸூக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தெரிவித்தார்.

இறைவன்
இறைவன்

By

Published : Jan 17, 2023, 1:33 PM IST

பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் I.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன்'. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை நடிகர் கார்த்தி வெளியிட்டிருந்தார்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், இறைவன் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இறைவன் படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. ஜெயம் ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார்.

அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம். எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்.

இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான 'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்', 'ஜனகனமன' ஆகிய படங்களைப் போலவே 'இறைவன்' திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். 'ஜெயம்' ரவி, நயன்தாரா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்களது ஸ்டார் வேல்யூ மற்றும் கடந்த 2022-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற அவர்களது படங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'இறைவன்' படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஹரி கே வேதாந்த்,

இசை: யுவன் ஷங்கர் ராஜா,

படத்தொகுப்பு: மணிகண்ட பாலாஜி,

கலை இயக்குநர்: ஜாக்கி,

சண்டை பயிற்சி: டான் அசோக்.

இதையும் படிங்க: திருமுல்லைவாசல் மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details