தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தமிழ் சினிமாவின் பிரபலமான பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தற்போது முன்னணி நடிகர் விஜய் ஆண்டனியுடன் (கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி) நான்கு படங்களை எடுத்துவரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராகவும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களின் திருமணமும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 என ஒரு மாத இடைவெளிக்குள்ளேயே குடும்பத்தால் திட்டமிடப்பட்டது. மூத்த மகள் ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022-ல் அபிஷேக் குமாருடன் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.