தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் - etv bharat tamil

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் படத்தின் பூஜை நடந்துமுடிந்தது.

சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!t
சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

By

Published : Jan 19, 2023, 9:36 AM IST

சென்னை: ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

"ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ஜார்ஜ் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சேகுவேரா இருந்திருந்தால் சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார்’ - திருமாவளவன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details